LIVE::::::: இலங்கை தேர்தல் எவருமே 50% வாக்கு எடுக்கப்போவது இல்லை விருப்பு வாக்கே ஜனாதிபதியை தீர்மாணிக்கப் போகிறது

LIVE::::::: இலங்கை தேர்தல் எவருமே 50% வாக்கு எடுக்கப்போவது இல்லை விருப்பு வாக்கே ஜனாதிபதியை தீர்மாணிக்கப் போகிறது

UPDATES ::::::::::::::6 pm London Time

தபால் வாக்குப் பதிவுகளில், அனுரா பல மாவட்டங்களில் முன் நிலை வகித்து வருகிறார். சஜித் பிரேமதாச 2ம் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இன்று இலங்கையில் நடைபெற்ற, ஜனாதிபதி தேர்தலில் சஜித் மற்றும் அனுராவுக்கு இடையே தான் கடுமையான போட்டி நிலவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 50% விகிதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்று, இந்த இருவரில் ஒருவர் வெல்வது என்பது சாத்தியமே இல்லை என்கிறார்கள் அரசியல் அவதானிகள். அந்த அளவு அனுரா மற்றும் சஜித் ஆகியோர் இருக்கிறார்கள். இதனால் விருப்பு வாக்குகளை எண்ணி, அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற நபரே ஜனாதிபதி என்று அறிவிக்க தேர்தல் திணைக்களம் முடிவு செய்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை நேரப்படி நள்ளிரவு 4 மணி தொடக்கம், முடிவுகள் கட்டம் கட்டமாக வெளியாக உள்ள நிலையில். விருப்பு வாக்கை கணக்கெடுத்து தான் முடிவுகள் வரும் என்றால், இதில் அனுரா வெல்லவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று நம்பப் படுகிறது.

எனவே முடிவுகளை உடனுக்கு உடன் அறிய எமது அதிர்வு இணையத்தோடு இணைந்திருங்கள்..