காதலியே கொலை செய்து புதைத்து விட்டு அதே இடத்தில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து இருக்கிறார் காதலன். வனத்துறையினர் பார்த்துவிட்டு போலீசுக்கு தகவல் கொடுக்கவும். போலீசார் வந்து சடலங்களை மீட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் மைசூர் மாவட்டம். அம்மாவட்டத்தில் கெப்பேஹூண்டி கிராமம். இக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சித்த ராஜு, சுமித்திரா. இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்திருக்கிறார்கள். அவ்வப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. அதனால் பிரிந்து பின்னர் மீண்டும் சேர்ந்து காதலித்து வந்தது இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சித்த ராஜுவும் சுமித்ராவும் கடந்த 18ஆம் தேதி சுற்றுலாத்தலமான காவேரி நிசர்கதாமா பகுதிக்கு சென்று இருக்கிறார்கள். அங்கு இருவரும் நெடுநேரம் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். திடீரென்று சித்தராஜூ, காதலி சுமித்ராவை கொலை செய்திருக்கிறார். கொலை செய்த பின்னர் அவரது உடலை குழிதோண்டி புதைத்து இருக்கிறார். அதன் பின்னர் தானும் உயிருடன் இருக்கக் கூடாது என்று அதே இடத்தில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
சில தினங்கள் கழித்து அந்தப் பகுதிக்குச் சென்ற வனத்துறையினர் தூக்கில் தொங்கியவாறு இருந்த சடலத்தைப் பார்த்துவிட்டு தலக்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தலக்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தூக்கில் தொங்கிய உடலை மீட்டுள்ளனர். அதன் பின்னர்தான் காதலியை குழிதோண்டி புதைத்து இருந்தது தெரிய வந்திருக்கிறது . சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.