கேட்ட காசுக்கு மேலாக அள்ளிக்கொடுத்த நடிகர்,கொடுத்தும் சம்மதிக்காத நடிகை!

கேட்ட காசுக்கு மேலாக அள்ளிக்கொடுத்த நடிகர்,கொடுத்தும் சம்மதிக்காத நடிகை!

கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக திகழ்ந்து வருபவர்தான் அந்த நடிகர். அவர் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் நூறு கோடிக்கும் மேல் வசூலிக்கக்கூடியவை. இதனால் மூத்தவரின் இடத்தை இந்த நடிகர் பிடித்துவிட்டார் என்று பேச்சுக்கள் சில காலமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அதேசமயம் நடிகை ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டும் வருகிறார். தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை வைத்திருக்கும் அந்த நடிகர், கோலிவுட்டின் கமர்ஷியல் கிங் என்ற பெயரை எடுத்தார்.

ஹிட்டை தாண்டி வசூலில் ஜொலிக்க ஆரம்பித்து தற்போது அசால்ட்டாக 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் படங்களை கொடுத்து தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை சேர்த்து வருகிறார்.

இதனால் பெரியவர் இடம் எங்கள் நடிகருக்குத்தான் என்று அவர் ரசிகர்கள் கூற பெரியவர் ரசிகர்களுக்கும் இவரது ரசிகர்களுக்கும் இணையத்தில் போஸ்ட் போரே நடந்து வருகிறது.

இது ஒருபக்கம் இருக்க நடிகர் புது முடிவெடுத்து அனைவருக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில் நடிகர் பற்றிய புது கிசுகிசு ஒன்று உருவாகியுள்ளது.

அதாவது தன்னுடன் நடித்த ஒரு நடிகையுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட நடிகர், அவரை பார்த்துக்கொண்டே இருக்க தன் வீட்டுக்கு அருகிலேயே அம்மணியை குடி வைத்ததாக சில மாதங்களுக்கு முன் பேசப்பட்டது.

இப்போதோ நடிகை நடித்திருக்கும் துப்பாக்கி படத்துக்கு இந்த நடிகர்தான் 20 கோடி ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகரும் நடிகருக்கு ரொம்பவே நெருக்கமானவராம்.

படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென பொருளாதார சிக்கல் வந்துள்ளது. நடிகரிடம் பணம் கேட்க தயாரிப்பாளர் கூச்சப்பட்டதை அறிந்த அந்த நடிகை இந்த நடிகருக்கு ஒரே ஒரு ஃபோன் மட்டும் தான் செய்தாராம். உடனே 20 கோடி ரூபாயை ஒரே பேமெண்ட்டில் அனுப்பி வைத்திருக்கிறார் அந்த நடிகர்.