நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில், கமலா ஹரிஸ் பின்னடைவை சந்தித்துள்ளதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் உலகில், உள்ள அனைத்து நாடுகளையும் விட, மிகவும் நூதனமான முறையில் தான் அமெரிக்க தேர்தல் நடக்கும் என்பது ஊர் அறிந்த உண்மை. அந்த வகையில்,
தற்போது வெளியாகி வரும், முடிவுகள் ரம்புக்கு ஆதரவான மாநிலங்கள் ஆகும். அதனால் அவர் முன் நிலை வகிப்பதாக கூற முடியாது. இன்னும் சில மணி நேரங்களில் கமலாவுக்கு ஆதரவான மாநில முடிவுகள் வெளியாக உள்ள நிலையில். அவருக்கு மேலும் எண்ணிக்கை கூடலாம். அமெரிக்க ஜனாதிபதி ஆவதற்கு 270 வாக்குகளை ஒருவர் பெறவேண்டும்.
அந்த வகையில் டொனால் ரம் 195 வாக்குகளை வென்றுள்ளார். இதேவேளை கமலா ஹரிஸ் 91 வாக்குகளையே வென்றுள்ளார். இன்னும் சொல்லப் போனால், 179 வாக்குகளை பெற்றால் மட்டுமே கமலா ஹரிஸ் வெல்ல முடியும் என்ற நிலை தொன்றியுள்ளது. ஆனால் 75 வாக்குகளை எடுத்தால், டொனால் ரம் வெற்றியடைவார். அமெரிக்காவில் உள்ள, 52 மாநிலங்களில் , நடைபெற்ற தேர்தலில் மக்கள் கமலா ஹரிஸ் மற்றும் , டொனால் ரம் ஆகியோரின் ஆதரவாளர்களையே தெரிவு செய்துள்ளார்கள்.
குறித்த இந்த ஆதரவாளர்கள், பின்னர் தனது எஜமானுக்கு வாக்குகளை போடுவார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு எண்ணிக்கையில் எலக்ரால் ரிஜிஸ்டர் என்னும் எண்ணிக்கை உள்ளது. இவை அனைத்தையும் கூட்டினால், 535 வாக்குகள் வரும்.