அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் டொனால் ரம் வெற்றிபெற்றுள்ளார். இன்னும் முழுமையான முடிவுகள் வரவில்லை என்றாலும், தற்போதைய நிலவரப்படி கமலா ஹரிஸ் வெல்ல வாய்ப்பு இல்லை. இன் நிலையில் கமலா ஹரிஸ் பின்னடைவைச் சந்திக்க 4 முக்கிய காரணங்களே உள்ளது.
1. இம்முறை தேர்தலில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் அவரது செல்வாக்கு வெகுவாக குறையத் தொடங்கிய உடனே, அவர் விலகி கமலா ஹரிசை அறிவித்தார். அதும் வெறும் 100 நாட்களுக்கு முன்னர் தான். அதனால் கமலா ஹரிசால், இந்த 3 மாதங்களில், எதனையும் செய்ய முடியவில்லை. போதிய காலம் இருக்கவில்லை. மேலும் ஜோ பைடன் காலத்தில், அமெரிக்காவில் வாழ்க்கைச் செலவு வெகுவாக அதிகரித்து உள்ளது.
2. விடையம், அமெரிக்காவுக்குள் 10 மில்லியன் மெக்ஸ்சிக்கோ இளைஞர்கள் ஊடுருவியுள்ளார்கள். இவர்களில் 80%சத விகிதமானவர்கள் , கிரிமினல்கள். இதனால் அமெரிக்காவில் சட்டம் ஒழுங்கு வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் கொத்துக் கொத்தாக நாடு கடத்துவேன் என்று டொனால் ரம் கூவிக் கூவி தேர்தல் பிரச்சாரம் நடத்தினார். ஆனால் கமலா ஹரிஸ் இது தொடர்பாக எதனையும் பேசவே இல்லை.
3. கமலா ஹரிஸ் கையில் எடுத்த விடையம் பெண்கள் , சிறுவர் பாதுகாப்பு, கருக் கலைப்பு சட்டம். ஆனால் அமெரிக்காவில் பல லட்சம் கத்தோலிக்கர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் இந்த கருகலைப்பு விடையத்தில், கமலா ஹரிஸ் சொன்ன கூற்றை, முற்றாக ஏற்றுகொள்ளவில்லை. மாறாக கமலா ஹரிசுக்கு எதிராக போர் கொடி தூக்கினார்கள்.
4. வது விடையம், இறுதி நேரத்தில் டொனால் ரம்புக்கு எலான் மஸ்க் உதவியது. டெஸ்லா கார் கம்பெனியின் உரிமையாளர் எலான் மஸ்க், டொனால் ரம்புக்கு நேரடியாக பல மில்லியன் டார்களை வழங்கி உதவிபுரிந்தார். தனி விமானம் ஒன்றைக் கூட கொடுத்து இருந்தார். அவரது ஆதரவு என்பது, டொனால் ரம்பை உச்சத்திற்கு கொண்டு சென்றது என்று தான் கூறவேண்டும். மேலும் சொல்லப் போனால், அமெரிக்காவில் உள்ள ஆண்கள், அமெரிக்காவை பாதுகாக்க ஒரு ஆண் ஜனாதிபதி தேவை என்று நினைக்கிறார்கள். தள்ளாடும் வயதில் உள்ள ஜோ பைடனுக்கு வாக்குப் போடுகிறார்கள், ஆனால் ஒரு பெண் வேட்ப்பாளரை நிராகரிக்கிறார்கள். இதனால் தான் அமெரிக்காவில் எந்த ஒரு பெண்ணும் இதுவரை ஜனாதிபதியாகியதே இல்லை.