மீண்டும் மீண்டும் சொதப்பல்.. கண்கள் சிவந்த புதின்! அடுத்த நொடி தூக்கியடிக்கப்பட்ட ஜெனரல்! என்னாச்சு

மீண்டும் மீண்டும் சொதப்பல்.. கண்கள் சிவந்த புதின்! அடுத்த நொடி தூக்கியடிக்கப்பட்ட ஜெனரல்! என்னாச்சு

மாஸ்கோ: சிரியாவில் இப்போது மீண்டும் உள்நாட்டுப் போர் வெடித்துள்ள நிலையில், அங்கு முக்கிய நகரமான அலெப்போ மீதி மிகப் பெரிய தாக்குதல் நடந்துள்ளது. சிரிய படைகளுக்கு ரஷ்யா தான் ஆதரவளித்து வருகிறது. சிரியாவில் நடந்த இந்த தாக்குதலால் டென்ஷன் ஆன புதின், அதிரடியாக சிரியாவில் உள்ள ரஷ்ய ஜெனரலை மாற்றியுள்ளார்.

மத்திய கிழக்கில் அமைந்துள்ள சிரியா.. அடிக்கடி உள்நாட்டுப் போர் நடக்கும் நாடுகளில் ஒன்றாகும். அங்குக் கடந்த 2000ம் ஆண்டு முதலே பஷர் அல் அசாத் என்பவர் தான் அதிபராக இருக்கிறார்.

அவரது ஆட்சிக்கு எதிராகப் பல முறை வன்முறை வெடித்துள்ளது. ஆனால், ரஷ்யாவின் ஆதரவு இருப்பதால் ஒவ்வொரு முறையும் பஷர் அல் அசாத் தப்பித்துக் கொள்வார்.

உள்நாட்டுப் போர்: இந்தச் சூழலில் தான் இப்போது மீண்டும் அங்கு உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது. அங்குள்ள அலெப்போ என்ற நகரில் நுழைந்த ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற அமைப்பினர் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்குக் கலகம் செய்வோருக்குத் துருக்கி ஆதரிக்கும் நிலையில், அங்குள்ள அசாத் அரசை ரஷ்யா கான் காப்பாற்றி வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தம் போடப்பட்ட நிலையில், அதன் பிறகு சிரியாவில் மீண்டும் உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது இதுவே முதல்முறையாகும். கடந்த சில நாட்களில் ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் அமைப்பினர் பல நகரங்களைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. சிரியா படைக்கு மிகப் பெரிய ஆதரவாக ரஷ்யா இருக்கும் நிலையில், இது ரஷ்யப் படைகளுக்குமே விடப்பட்ட சவாலாகவே பார்க்கப்பட்டது.

கண்கள் சிவந்த புதின்: சிரியாவில் நடந்த இந்த விஷயம் புதினை மிகவும் கோபமடைய வைத்துள்ளதாம். இதற்கிடையே சிரியாவில் ரஷ்ய படைகளைக் கண்காணிக்கும் ஜெனரல் செர்ஜி கிசெல் என்பவரைப் பதவி நீக்கம் செய்து ரஷ்யா உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் மீண்டும் தாக்குதல் வெடித்ததைத் தொடர்ந்து 53 வயதான கிசெல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அதேநேரம் உக்ரைன் போர் தொடங்கியது முதலே ரஷ்யா ராணுவத்தில் செய்யும் மாற்றங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிசெலுக்குப் பதிலாக கர்னல் ஜெனரல் அலெக்சாண்டர் சாய்கோ என்பவர் சிரியாவில் உள்ள ரஷ்ய படைகளின் இன்சார்ஜ் ஆக நியமிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து சொதப்பல்: கடந்த 2022ம் ஆண்டு உக்ரைனின் கார்கிவ் பகுதி அப்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கு தான் முதலில் இந்த கிசெல் இன்சார்ஜ் ஆக இருந்தார்.

அந்த நேரத்தில் உக்ரைன் படைகள் நடத்திய மின்னல் வேகத் தாக்குதலில் கார்கிவ் பகுதி ரஷ்யாவின் கையைவிட்டுப் போனது. இதன் காரணமாகவே கிசெல்லை சிரியாவுக்கு அனுப்பியிருந்தார் புதின். இப்போது இங்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், பலரும் கிசெலின் செயல்திறன் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ரஷ்ய ஊடகங்கள்: இது தொடர்பாக ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஷ்யாவின் அணுகுமுறை மாற வேண்டும். சிரியா ராணுவ மண்டலம் நீண்ட காலமாகவே திறமையற்ற தோல்வியுற்ற ஜெனரல்கள் கைகளுக்கே செல்கிறது. இதனால் ரஷ்யாவின் நற்பெயருக்குச் சவால் விடுக்கும் சம்பவங்கள் நடக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாகக் கடந்த 2017 காலகட்டத்தில் சிரியாவில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டோர் மீது இரக்கமற்ற தாக்குதல்களை நடத்திய ஜெனரல் செர்ஜி சுரோவிகியை மீண்டும் சிரியாவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.