டமாஸ்கஸ்: சிரியாவில் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. அந்த நாட்டின் அதிபர் பஷர் அல் அசாத் மற்றும் அவருக்கு எதிரான அமைப்பினருக்கும் இடையே பயங்கர சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில் தான் ஒருவேளை சவூதி அரேபியா தலையிடும் பட்சத்தில் அந்த நாட்டின் ஆதரவு யாருக்கு கிடைக்கும்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு முதல் தொடர்ந்து சிரியா நாட்டின் அதிபராக இருப்பவர் பஷர் அல் அசாத். இந்த நாட்டில் அடிக்கடி உள்நாட்டு போர் என்பது நடந்து வருகிறது. கடந்த 8 ஆண்டுகளாக நாட்டில் அமைதி நிலவி வந்தது.
தற்போது மீண்டும் உள்நாட்டு போர் என்பது அங்கு வெடித்துள்ளது. சிரியா அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக சில அமைப்பினர் திரண்டு போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது அவர்கள் அரசுக்கும், அதிபர் பஷர் அல் அசாத்துக்கும் எதிராக கிளம்பி உள்ளனர். ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற அமைப்பின் தலைமையில் போராட்டக்காரர்கள் சிரியாவின் 2வது பெரிய நகரான அலெப்போவை கைப்பற்றி உள்ளனர். அங்கு மக்கள் வீடுகளில் முடங்கி உள்ள நிலையில் ராணுவம் மற்றும் போராட்டக்குழுவினர் இடையே மோதல் என்பது நடந்து வருகிறது. இந்த உள்நாட்டு போர் என்பது நீண்ட காலம் நடக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஏனென்றால் கடந்த 2011ல் தொடங்கிய உள்நாட்டு போர் 2016 வரை 5 ஆண்டுகள் வரை நீடித்ததது. இதனால் இந்த போரும் முடிவுக்கு வர அதிக காலம் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தான் தற்போது பலருக்கும் சிரியா உள்நாட்டு போரில் சவூதி அரேபியா யாருக்கு ஆதரவு வழங்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதன்படி பார்த்தால் சவூதி அரேபியா என்பது தற்போதைய அதிபர் பஷர் அல் அசாத்துக்கு ஆதரவு தெரிவிக்காது என்றே சொல்லப்படுகிறது. மாறாக போராட்டக்குழுவுக்கு ஆதரவு அளிக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் சவுதி அரேபியா என்பது சன்னி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடாகும். அதேபோல் சிரியாவிலும் சன்னி இஸ்லாமியர்கள் அதிகம் இருந்தாலும் கூட ஷியா பிரிவின் அங்கமாகவே கருதப்படும் அலவைட் பிரிவின் பஷர் அல் அசாத் அதிகாரத்தில் உள்ளார்.
அதுமட்டுமின்றி தற்போது உள்நாட்டில் போரை முன்னெடுத்து வரும் ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் அமைப்பு என்பது அல் குவைதா அமைப்பின் அங்கமாக செயல்பட்டது. இந்த அல்குவைதா என்பது ஒசாமா பின்லேடன் உருவாக்கிய பயங்கரவாத அமைப்பாகும். ஒசாமா பின்லேடனும் சவூதி அரேபியாவை சேர்ந்த சன்னி இஸ்லாமியர் தான். மேலும் இதற்கு முன்பு நடந்த உள்நாட்டு போரிலும் கூட சவூதி அரேபியா, சிரியா அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக போரிட்டவர்களுக்கு உதவி செய்தது. அதன்படி பார்த்தால் சவூதி அரேபியா சிரியா அதிபர் பஷர் அல் அசாத்துக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது.
மேலும் சிரியா அதிபர் முகமது அல் அசாத்துடன் ஈரான் மற்றும் ரஷ்யா நட்பாக உள்ளது. கடந்த 2011ல் உள்நாட்டு போராக மாறியது. கிளர்ச்சியாளர்கள் அலெப்போ நகரை கைப்பற்றினர். அதன்பிறகு ஈரான், ரஷ்யா உதவியுடன் 2016ல் அந்த நகரை அதிபர் பஷர் அல் அசாத் கைப்பற்றினார். தற்போது அந்த நகரில் தான் மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. இந்த முறையும் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக புரட்சிப்படை கிளம்பி உள்ளது. இதனால் விரைவில் அதிபர் முகமது அல் அசாத் ஈரான் மற்றும் ரஷ்யாவிடம் உதவி கேட்க வாய்ப்புள்ளது.
இந்த உள்நாட்டு போர் என்பது நேற்று தான் தொடங்கியது. தற்போது வரை வெளிநாடுகள் தலையிடவில்லை. சவூதி அரேபியா, ஈரான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் வெளிப்படையாக இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை அந்த நாடுகள் சிரியா உள்நாட்டு போரில் தலையிடும் ரஷ்யா, ஈரான் ஆகியவை அதிபர் பஷர் அல் அஷாத் பக்கமும், சவூதி அரேபியா அதிபருக்கு எதிரான குழுக்களும் ஆதரவு அளிக்கலாம் என்றே சொல்லப்படுகிறது. அதோடு அலெப்போ நகரில் மோதல் என்பது வலுவடையும். அதுமட்டுமின்றி ஏற்கனவே மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல் – காசா போர், இஸ்ரேல் – ஹெஸ்புல்லா மோதல், இஸ்ரேல் – ஈரான் மோதல் நடந்து வருகிறது. இதன் அடுத்தக்கட்டமாக சிரியா உள்நாட்டு போரும் ஏற்பட்டுள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் என்பது இன்னும் அதிகரிக்கும்.