லண்டனில் பணம் சேர்த்து, வடக்கில் உள்ள மக்களுக்கு உதவி புரிந்துவந்த நபர் ஒருவரை, கொழும்பு விமான நிலையத்தில் வைத்து பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். இப்படியான கைதுகள் ஏன் நடைபெறுகிறது என்றால், இதற்க்கு போட்டியும் புறாமையும் தான் காரணம். லண்டனில் இவர் ஒரு அமைப்பில் இருந்து பணத்தை சேகரித்து இருப்பார். மற்ற அமைப்பில் இருக்கும் நபர்களுக்கு இவரை பிடித்து இருக்காது.
அதனால் இலங்கை செல்லும் நேரம் பார்த்து மின் அஞ்சம் மூலம் பல தகவல்களை அனுப்பி இருப்பார். இதனூடாகவே கொழும்பு விமான நிலையத்தில் பல கைதுகள் இடம்பெறுகிறது. எல்லாமே தமிழர்கள் கொடுக்கும் முறைப்பாடு தான். ஆனால் நல்லெண்ண அரசு என்று கூறிக்கொண்டு, இந்த நபரை இலங்கை அரசு கைதுசெய்து இருப்பது, பெரும் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.
தற்போது கைதான நபர், 2009ம் ஆண்டு நாடை விட்டு வெளியேறி லண்டன் சென்றார் என்றும். பின்னர் பணத்தை சேகரித்து அவ்வப்போது வடக்கு மக்களுக்கு உதவி வந்தார் என்றும் அறியப்படுகிறது. இதேவேளை இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பணம் சேர்த்தார் என்ற குற்றச்சாட்டில் இவர் தற்போது கைதாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.