ரஸ்யா உக்ரைன் குறித்த தனது இலக்குகளை அடையும் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வெளிநாட்டு புலனாய்வின் தலைவர் சேர்கேய் நரிஸ்கின் தெரிவித்துள்ளார்.
அனைத்து பகுதிகளிலும் மூலோபாயரீதியிலான முன்முயற்சி எங்களிற்கு சாதகமாக உள்ளது எங்கள் இலக்குகளை அடையும் நிலையில் உள்ளோம் என தெரிவித்துள்ள அவர் உக்ரைன் படையினர் வீழும் நிலையில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவை பொறுத்தவரை உக்ரைன் ஜனாதிபதி தனது நியாயபூர்வ தன்மையையும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான திறiனையும் இழந்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஸ்யாவின் வெளிநாட்டு புலனாய்வு பிரிவின் தலைவரின் கருத்துக்கள் கிரெம்ளினின் சிந்தனைகளை வெளிப்படுத்துபவை என்பது குறிப்பிடத்தக்கது