டானியல் பாலாஜிக்கு உண்மையில் என்ன நடந்தது -தளபதி விஜய் ஏன் அதிர்ச்சியடைந்தார் ?

டானியல் பாலாஜிக்கு உண்மையில் என்ன நடந்தது -தளபதி விஜய் ஏன் அதிர்ச்சியடைந்தார் ?

சினிமாவில் ஆட்களை படுகொலை செய்யும், வில்லான இருக்கிறார். நிஜ வாழ்கையில் அவர் ஒரு ஹீரோ… என்று தளபதி விஜய் அவர்கள் மேடையில் வைத்து, பாராட்டிப் பேசியது பலருக்கு நினைவில் இருக்கலாம். அவர் வேறு யாரும் இல்லை டானியல் பாலாஜி(Daniel Balaji)  தான். வெறும் 48 வயது தான் ஆகிறது. ஆனால் ஹாட் அட்டாக். பலருக்கு தெரியாது இவர் நடிகர் முரளியின் சித்தி பையன். 1975ம் ஆண்டு பிறந்த டானியல் பாலாஜி, தான் இறந்தால் தனது கண்கள் தொடக்கம் பல உறுப்புகளை தானமாகக் கொடுப்பதாக மருத்துவரிடம் கூறியுள்ளார்.

இதனால் டானியல் பாலாஜி இறந்த சில நிமிடங்களில் எல்லாம் அவரது பல உறுப்புகளை எடுத்து மருத்துவர்கள் தேவைப்படும் நோயாளிகளுக்கு பொருத்தியுள்ளார்கள். இறப்பிலும் பல சாதனைகளை அவர் புரிந்துள்ளார். மேலும் சொல்லப் போனால், ஆவடியில் ஊர் மக்கள் வேண்டிக் கொண்டதால் ஒரு கோவிலைக் கட்டிக் கொடுத்தார். தனது சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை அவர் கோவில் கட்ட பயன்படுத்தி உள்ளார்.

இவரது திடீர் மறைவு திரை உலகை தூக்கிப் போட்டுள்ளது என்று தான் சொல்லவேண்டும். அதிலும் விஜய் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. மேலும் பல நடிகர்கள் இந்த ஹாட் அட்டாக் தொடர்பாக தான் , பேசி வருகிறார்கள். தற்போது 35 , 40 வயது நபர்களுக்கு கூட ஹாட் அட்டாக் வருகிறது. நமது உணவுப் பழக்கமும், மதுவுமே காரணம் என்கிறார்கள் வைத்தியர்கள். சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஒரு ஆய்வில், ஆட்டு இறைச்சி அதிகம் சாப்பிடும் நபர்களுக்கு, கொலஸ்ரோல் அதிகம் உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

காலஸ்ரோலில் பல வகைகள் இருந்தாலும், இந்த LDL என்று அழைக்கப்படும் ((low-density lipoprotein) காலஸ்ரோல் அதிக அளவில் ஆட்டிறைச்சியில் உள்ளது. இந்த LDL காலஸ்ரோல், தான் ரத்த நாளங்களில் பயணித்து அங்கே உட் சுவரில் படிந்து, அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் சடுதியாக இதயம் செயல் இழந்து போய் திடீர் உயிரிழப்பு ஏற்படுகிறது.