கோட்டாவை கலைப்பது என்று எதிர்கட்சிகள் முடிவு: Impeachmentமுறையில் இறங்க முடிவு

இந்த செய்தியை பகிருங்கள்

இலங்கை அரசாங்கத்தை முதலில் அகற்ற, பாராளுமன்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவது என எதிர்கட்சிகள் முடிவெடுத்துள்ளது. இது நிறைவேறியதும் அடுத்து அதிபர் கோட்டபாய மீது நம்பிக்கை இல்லை என்று, MPக்கள் போதுமான அளவு வாக்குப் போட்டால், அதிபரை வீட்டுக்கு அனுப்ப முடியும். இதனையும் செய்ய எதிர்கட்சிகள் இன்று(08) முடிவெடுத்துள்ளதாக சற்று முன்னர் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக யார் யாரெல்லாம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தமக்கு ஆதராவாக வாக்குப் போடுவார்கள் என்ற பட்டியலை, எதிர்கட்சி தயாரிக்க ஆரம்பித்துள்ளது. அதில் பெரும்பாண்மை கிடைக்கும் என்று தெரிகிறது… எனவே…

அரசைக் கலைக்க முடியும் என்று நம்பப்படுகிறது. ஆனால் ஜனாதிபதியை கலைக்க மேலதிக பெரும்பாண்மை தேவை. எனவே அதனையும் திரட்ட எதிர்கட்சிகள் முடிவுசெய்துள்ளார்கள். இது நிறைவேறினால், இலங்கை வரலாற்றிலேயே முதன் முறையாக ஆட்சிக்காலத்தில் பதவியை இழந்த முதல் ஜனாதிபதி கோட்டபாய என்ற அவப்பெயர் கிட்டும்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us