அமெரிக்காவில் இடம்பெறவுள்ள ஜானாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் வெற்றிபெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. வட அமெரிக்காவுக்கான நேரலை பரப்புரை ஒன்றை வாசித்த ஜோ பைடன் டெலி-புரொம்பட்டர் என்று அழைக்கப்படும், அதாவது வாசிக்கவேண்டியதை காட்டும் கருவி அது கமராவுக்கு மேலே இருக்கும். அதனைக் கூட சரியாக பார்த்து வாசிக்க முடியாமல் பைடன் தடுமாறியுள்ளார். அவர் திடீர் திடீரென தனக்கு தோன்றும் விடையங்களை கூறிவிட்டு. பின்னர் எழுதிக் கொடுத்ததை வாசிக்க முற்பட்டவேளை, பெரும் குழப்பகரமாக அமைந்தது. அவருக்கு டெமென்ஷியா என்ற ஞாபக மறதி நோய் இருப்பது அனைவருக்கும் தெரிந்தவிடையம். ஆனால் அதனை அமெரிக்க அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
இருப்பினும் பெருவாரியான ஒரு வெற்றியாக அது இருக்காது. காரணம் அவரை எதிர்த்து போட்டியிடப் போவது, முன் நாள் ஜனாதிபதி டொனால் ரம். அவருக்கு இன்னும் ஆதரவு இருக்கிறது. “அமெரிக்கா வெள்ளை இன மக்களுக்கே” என்ற, அவரது நிலைப்பாடு அவருக்கான ஆதரவை இன்றுவரை தக்க வைக்க உதவியாக அமைந்துள்ளது.
எந்த ஒரு வகையிலும் ரம் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில், அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரம் போட்டியிடும் வேளை, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, ஹெலரி கிளிங்டனுக்கு, வெல்லும் வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் ரம் தனது நண்பரான FBI அதிகாரியை பாவித்து, ஹெலரிக்கு எதிராக பல செய்திகளை பரவிட்டதோடு. ஹெலரியை எப்.பி.ஐ விசாரிக்க உள்ளதாக தகவலை கசியவிட்டு. அவரது ஆதரவை வெகுவாகக் குறைத்து. வெற்றிபெற்றார் ராம்.
ஆனால் பின்னர் அந்த FBI அதிகாரியையே பதவி நீக்கம் செய்தார் ரம். எந்த ஒரு விசாரணையும் ஹெலரிக்கு எதிராக இடம்பெறவில்லை. அத்தோடு ரஷ்யா மற்றும் சீனாவோடு நட்ப்புறவில் இருக்கிறார் ரம். இதனால் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதாக தற்போது சில அமெரிக்கர்கள் கருத்துகிறார்கள். இதனால் தான் ஜோ பைடனுக்கான ஆதரவு சற்று அதிகரித்துள்ளதாக , தற்போதைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன்.
அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள், ரம் மீது கிரிமினல் குற்றச்சாட்டை சுமத்தி தற்போது நீதிமன்றின் முன் நிறுத்தியுள்ள நிலையில். அவர் குற்றவாளி என்று இனம்காணப்பட்டால், வரும் நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் பங்கேற்க முடியாத சூழ் நிலை தோன்றும். விலை மாதுக்கு அரச பணத்தை எடுத்துக் கொடுத்தார் என்பதே ரம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு. இந்த பாலியல் தொழிலாளிக்கு ரம் ஏன் பெரும் தொகைப் பணத்தை வழங்கினார் என்பது இதுவரை புரியாத புதிராகவே உள்ளது.
இதனைத் தான் தற்போது நீதிமன்றம் விசாரித்தும் வருகிறது. போட்டியிட்டால் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாகும் வாய்ப்பு ரம்புக்கு இன்னமும் உள்ளது என்பது பெரும் ஆச்சரியமான விடையம் தான் !
Source : https://www.reuters.com/world/us/trump-has-slight-edge-over-biden-us-swing-state-election-polls-2024-04-23/