வீட்டுக்கு உள்ளே செல்லலாமா ? என்று மேல் அதிகாரிகளின் உத்தரவுக்காக மெற்றோ பொலிடன் பொலிசார் வாசலில் காத்து நிற்க்க. உள்ளே தனது மகன் பாவிக்கும் ஸ்கேட்- போட்டால்(skateboard) மனைவியை அடித்தே கொன்றுள்ளார் ஒரு ஆபிரிக்க நபர். இந்தச் சோகமான சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது. மனைவி தனக்கு ஆபத்து என்று பொலிசாருடன் தொடர்புகொண்டுள்ளார். அவர்களும் விரைந்து வந்துவிட்டார்கள். ஆனால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல மேல் அதிகாரிகளின் அனுமதி தேவை. இதனால் அவர்கள் வெளியே நின்றவேளை.. இந்தச் சபவம் நிகழ்ந்துள்ளது.
“டயவு” என்ற 41 வயதுப் பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். அவரது மண்டை ஓட்டு எலும் நொருங்கி அவர் இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். “ஒலுபுமி” என்னும் இந்த ஆபிரிக்க நபர், மிகவும் கொடூரமானவர் என்று கூறப்படுகிறது. இவர் அடிக்கடி தனது மனைவியை மற்றும் மகனை தாக்கி வந்துள்ளார். சில முறை கைதாகி பின்னர் பொலிசார் இவரை விடுதலை செய்த நிலையில், இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொலிசார் சுமார் 25 நிமிடங்கள் வீட்டுக்கு வெளியே நின்றுள்ளார்கள். ஆனால் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை என்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலுபுமி குற்றவாளி என்று 7 பேர் அடங்கிய யூரிகள் தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில். நீதிபதி கடுமையான தண்டனையை வழங்க உள்ளதாக மீடியாக்களில் செய்தி கசிந்துள்ளது. இந்த நூற்றாண்டில் இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள் என்றாம் நம்ப முடிகிறதா ?
Source: https://www.dailymail.co.uk/news/article-13349449/Abusive-husband-beat-wife-death-skateboard.html