கிட்டத்தட்ட 40 வயதை நெருங்கியும் இன்னும் இளமை குறையாமல் மாஸ், ஸ்டைல் என அதே தோற்றத்துடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. சமீப காலமாக அவர் கவர்ச்சி உடைகளை அணிந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களுக்கு வேற லெவல் மவுஸ் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் “GQ’s Most Influential Young Indians of 2024″க்கான விருது விழா நிகழ்ச்சி மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா கருப்பு நிற கவர்ச்சியான கச்சிதமான கிளாமர் ஆடை அணிந்து வந்து அந்த நிகழ்ச்சியில் இருந்த ஒட்டுமொத்த பேரையும் திரும்பிப் பார்க்க செய்தார்.
இந்த விருது விழாவில் இந்தியாவில் மிகவும் செல்வாக்கு மிக்க 35 பிரபலங்களுக்கு GQ நிறுவனம் சார்பாக விருது வழங்கப்பட்டது. இதில் நயன்தாராவுக்கு விருது அறிவிக்கும்போது ஒன் அண்ட் ஒன்லி நயன்தாரா இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் தென்னிந்திய மொழிகளில் 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் என நயன்தாராவை பற்றி பெருமையாக பேசி விருது கொடுக்க நயன்தாரா கெத்தா வந்து அதைப் பெற்றுக் கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
#GQPowerList2024 Bossing GQ most influential young Indians😇 pic.twitter.com/ks0iPXMjh6
— Nayanthara✨ (@NayantharaU) April 27, 2024