கடந்த 2 தினங்களுக்கு முன்னர், விஷால் நடிப்பில் வெளியான படம் “ரத்னம்” தொடர்பாக பல சர்சையான கருத்துகள் எழுந்துள்ளது. குறிப்பாக இந்தப் படத்தை எந்த அளவு சொதப்ப முடியுமோ அந்த அளவு சொதப்பி எடுத்துள்ளார் இயக்குனர் ஹரி என்று தான் சொல்ல வேண்டும். கதாநாயகியை ஒரு அம்மா ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கிறார் விஷால். ஆனால் கதாநாயகியோ விஷாலை விழுந்து விழுந்து காதலிக்கிறார்.
இதுவே படத்தில் எரிச்சலை ஊட்டும் சம்பவமாக இருக்க, அது போக நீட் தேர்வு எழுதி பாஸ் ஆனதால் எனக்கு நல்ல வேலை கிடைத்திருக்கு என்றும். நீட் தேர்வு என்பது அவசியம் என்பது போலவும் படத்தில் கதாநாயகி பேசியுள்ளார். இது சமூக வலையத் தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இயக்குனர் ஹரி தமிழக மக்கள் மன நிலையை புரிந்து தான் இந்த கதையைப் படமாக்கினாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.