பிறந்தநாளில் அஜித்திற்கு வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்த ஷாலினி – என்ன தெரியுமா?

பிறந்தநாளில் அஜித்திற்கு வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்த ஷாலினி – என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருபவர்கள் அஜித் ஷாலினி இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் டாப் நடிகராக ஸ்டார் அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.

தற்போது குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படியான நேரத்தில் அஜித் நேற்று மே1ம் தேதி தனது 53வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அவருக்கு அவரது மனைவி ஷாலினி மிகப்பெரிய அளவில் சப்ரிஸ் கொடுக்கும் விதமாக அஜித்திற்கு மிகவும் பிடித்தமான பரிசு ஒன்றை கொடுத்து அவரை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஆம், தனது கணவரின் பிறந்தநாளுக்கு அவருக்கு பிடித்த டுகாட்டி பைக் ( Ducati bike) பரிசாக வழங்கியிருக்கிறார். அதன் விலை ரூபாய் 30 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மற்றும் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் ரசிகர்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.