தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகரான கவின் முதன் முதலில் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து சீரியல் நடிகராக தான் தன் வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவருக்கு மிகப்பெரிய அளவில் பிரபலமும் புகழும் கிடைத்தது தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தாதா திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று மார்க்கெட்டில் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி குவித்தது.
இதன் மூலம் மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டார். அதை எடுத்து அவர் அதிக சம்பளம் கேட்டு அதிர வைத்தார். இருந்தாலும் அதற்கு அவர் ஒர்த்தான நடிகர் என அவரை தேடிப்போய் படங்களை தயாரிப்பாளர்கள் புக் செய்தார்கள்.அந்த வகையில் தற்போது நெல்சன் திலிப் குமார் தனது புதிய பிசினஸ் ஒன்றை கையில் எடுத்திருக்கிறார்.
ஆம் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதில் முதல் படமாக கவினை வைத்து Bloody Begger என்ற படத்தை தயாரிக்க உள்ளார். அதன் புரோமோ வீடியோவை தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதில் கொடூர பிச்சைக்காரனாக கவின் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு வித்தியாசமான தோற்றத்தில் இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.