தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படைப்பாளியாக புகழ்பெற்றிருக்கும் இயக்குனர் சங்கர் தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி பிரபலமான இயக்குனராக பார்க்கப்பட்டு வருகிறார்.இவரது மூத்த மகளான ஐஸ்வர்யா சங்கருக்கு அண்மையில் தான் இரண்டாம் திருமணம் நடைபெற்றது.
முதல் திருமணம் துரதிர்ஷ்ட வசமாக சரி வராமல் போக அதனை விவாகரத்து செய்து விட்டார்கள். அதன் பின்னர் தற்போது தனது துணை இயக்குனர் ஒருவரையே தனது மகளுக்கு மணமுடித்து வைத்திருக்கிறார் சங்கர். இந்த திருமணம் பிரம்மாண்டமாக அண்மையில் தான் நடைபெற்றது அந்த திருமணத்தில் பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள்.
அந்த வகையில் விஜய்யின் மனைவி சங்கீதா கலந்து கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வந்தது. ஆனால் தற்போது விஜய்யின் மகன் சஞ்சையும் கலந்துகொண்டு ஷங்கர் மகள் மற்றும் மகன்களுடன் குடும்பமாக நின்று எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இதில் பார்ப்பதற்கு அப்பா விஜய்யை மிஞ்சும் அளவுக்கு மிகவும் சஞ்சய் ஹேண்ட்ஸம்மாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் எல்லோரும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் சங்கர மகள் குடும்பத்துடன் இவ்வளவு நெருக்கமாக விஜய் மகன் இருப்பதை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் இவர்களுக்குள் இப்படி ஒரு உறவா? என ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள் இதோ அந்த புகைப்படம்.