லண்டனில் இருந்து புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்வேஸ் விமானம், சுமார் 11 மணித்தியாலங்களின் பின்னர் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது. கடும் காற்றழுத்தம் காரணமாக, கால நிலை மாறியதால். விமானம் 36,000 ஆயிரம் அடியில் பறந்தவேளை, திடீரென 6,000 அடிக்கு கீழே தள்ளப்பட்டுள்ளது. விமானம் சுமார் 4 நிமிடங்களில் எல்லாம் 6,000 அடிக்கு தள்ளப்பட்டதால், அது செங்குத்தாக செல்லவேண்டி நேர்ந்தது. இதனை விமானிகள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இந்த விபத்து காரணமாக, 73 வயது பிரித்தானிய நபர் இறந்துள்ளார். மேலும் 70 பேர் காயமடைந்துள்ளார்கள். விமானப் பணிப் பெண்கள் அடிபட்டு ரத்தம் சொட்டச் சொட்ட ஆசனத்தில் இருந்துள்ளார்கள். விமானத்தில் மேல் பகுதியில் உள்ள, சூட்கேஸ் வைக்கும் கதவுகள் திறந்துகொண்டதால். மேலே இருந்து பல பொருட்கள் பயணிகள் மீது விழுந்துள்ளது. இதனால் பலருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
விமானத்தை அவசரமாக பாங்காக் விமான நிலையத்தில் தரையிறக்கினார்கள் விமானிகள். இதில் இருந்த அனைவரும் பாங் காக் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்கள். பயணித்தவர் ஒருவர் BBC செய்திச் சேவைக்கு தெரிவிக்கையில், சில நிமிடங்களில் நாம் அனைவரும் ஒரு நரகத்தை பார்த்து விட்டோம் , இனி விமானத்தில் ஏறவே எனக்கு பயமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.