ரஷ்ய ராணுவம் டாட்டிக்கல் நியூக்கிளியர் குண்டை(tactical nuke)(அதாவது மட்டுப்படுத்தப்பட்ட அணு குண்டு) இது மிகப் பெரிய சேதத்தை விளைவிக்காது. இந்தக் குண்டை ரஷ்ய ராணுவம் கொண்டு சென்று உக்ரைனுக்கு அருகே பொருத்தியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக அமெரிக்கா, உக்ரைனுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்து வந்தது. அதாவது ரஷ்யா சிறிய ரக அணு குண்டை உங்கள் நாட்டின் மீது ஏவக் கூடும் என்பது தான் அது. அமெரிக்கா சொன்னது போலவே தற்போது நடந்து வருகிறது.
ஆனால் குறித்த அணு குண்டை ஏவினால், அது ரஷ்ய மண்ணில் வைத்தே சுட்டு விழ்த்தப்படும் என்ற் உக்ரைன் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏவுகணை ரஷ்யா எல்லையைத் தாண்ட முன்னரே தம்மால் அதனை சுட்டு விழுத்த முடியும் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது. அமெரிக்கா தற்போது கொடுத்துள்ள பெரும் தொகையான ஆயுதங்களில், பெரும்பாலானவை வான் பாதுகாப்பு கட்டமைப்பு ஆயுதங்கள் ஆகும்.
தற்போது உக்ரைனிடம் பல நாடுகள் கொடுத்த, வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உள்ளது. அவற்றை உக்ரைன் மிகவும் முக்கிய இடங்களில் பொருத்தி வைத்துள்ளது. எனவே உக்ரைன் நிச்சயம் அந்த ஏவுகணைகளை பாவிக்கும் என்பது ஊர் அறிந்த விடையம். ஆனால் ரஷ்யா இந்த சிறிய ரக அணு குண்டை ஏவினால், அது பெரும் அழிவுக்கு வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது. ரஷ்யா இந்த அணுகுண்டை ஏவினால், உதவிக்கு அமெரிக்க படைகள், உக்ரைனுக்குள் செல்லவேண்டி நேரிடலாம். அதன் பின்னர் என்ன நடக்கும் என்பது , அனைவருக்கும் தெரியும்.