ரஷ்யா மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகளை பிரிக்கும் எல்லையில் அமைந்துள்ளது, டாகஸ்டான் என்னும் ஒரு சிறிய யூனியன் பிரதேசம். இது ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள ஒரு இடம். இங்கே சுமார் 3.1 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இன் நிலையில் இன்று காலை 7 மணி அளவில் அங்குள்ள ஒரு தேவலயம் மீது முஸ்லீம் தீவிரவாதிகள், தாக்குதல் ஒன்றை நடத்தியதில், 12 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது.
இது உக்ரை நாட்டின் வேலை என்று ரஷ்யாவால் கூறமுடியாது. இருப்பினும் ரஷ்ய தலை நகர் மாஸ்கோவில் இருந்து பல மைல் தொலைவில் வடக்கே இருக்கும் இந்த யூனியன் பிரதேசத்தை முஸ்லீம் தீவிரவாதிகள் குறிவைக்க அவசியமே இல்லை என்று தான் கூறவேண்டும். அப்படி அவர்கள் குறி வைத்துள்ளார்கள் என்றால், அதன் பின்னால் பெரும் காரணம் ஒன்று இருக்க வாய்ப்புகள் உள்ளதாக, சர்வதேச வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.
தற்போது ஏற்பட்டுள்ள சூழ் நிலை காரணமாக, ரஷ்யா தனது துருப்புகளில் ஒரு பகுதியை இந்த யூனியன் பிரதேசத்திற்கு அனுப்ப வேண்டிய கடைப்பாட்டில் உள்ளது. மேலும் சொல்லப் போனால் ரஷ்யாவின் கவனம் தற்போது , உக்ரைன் போரில் மட்டும் இல்லை. மாறாக இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதலை எப்படி சமாளிப்பது என்பதிலும் , கவனம் செலுத்தவேண்டி உள்ளது. ரஷ்யா மீது உக்ரைன், பன் முக போர் கதவுகளை புதிது புதிதாக திறந்து வருகிறதா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.