இதுவரை வெளிவராத…. வரலக்ஷ்மியின் கலக்கலான திருமண புகைப்படங்கள்!

இதுவரை வெளிவராத…. வரலக்ஷ்மியின் கலக்கலான திருமண புகைப்படங்கள்!

சரத்குமாரின் மகளான நடிகை வரலட்சுமி தமிழ் சினிமாவில் போடா போடி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி தொடர்ந்து சர்க்கார் மற்றும் தாரை தப்பட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லியாக நடித்து தனது வேறொரு ரூபத்தை வெளி காட்டினார்.

வரலட்சுமி நடிப்பு குறிப்பாக பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது என்று சொல்லலாம். இதனிடையே மும்பையை சேர்ந்த நிக்கோலஸ் என்ற தொழிலதிபரை 14 வருடங்களாக காதலித்து தற்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த திருமணத்தில் திரைத்துறையை சேர்ந்த பல நட்சத்திர பிரபலங்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள்.

ஜூலை 10, 2024 அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.தென்னிந்திய பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.