மரணித்த அண்ணனின் சமாதியில் மகனுக்கு பெயர் சூட்டிய தம்பி

மரணித்த அண்ணனின் சமாதியில் மகனுக்கு பெயர் சூட்டிய தம்பி

கன்னட சினிமா உலகில் பிரபல இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா. இவர் கன்னட சினிமாவில் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த வந்தார். இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு நெஞ்சுவலி காரணமாக திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்து விட்டார்.

இருக்கு மேக்னா என்ற மனைவி இருக்கிறார். அவர் மரணித்தபோது அவரது மனைவிக்கு நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தார். பின்னர் மகன் பிறந்து தற்போது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பியான நடிகர் துருவா சர்ஜா,

தன்னுடைய இரு குழந்தைகளுக்கு மறைந்த அண்ணன் சிரஞ்சீவி சர்ஜாவின் சமாதியில் பெயர் சூட்டு விழா நடத்தியுள்ளார். அதன்படி தனது மூத்த மகளுக்கு ருத்ராக்ஷி என்றும் தனது மகனுக்கு ஹயக்ரீவா என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.