விஷாலும் 13 பேரும் கிளம்பியாச்சு துப்பறிவாளன் 2 படத்தை தானே தயாரிக்கும் விஷால் !

விஷாலும் 13 பேரும் கிளம்பியாச்சு துப்பறிவாளன் 2 படத்தை தானே தயாரிக்கும் விஷால் !

விஷால் நடித்து முன்னர் வெளியான துப்பறிவாளன் படம், கொஞ்சம் விஷாலுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஓகோ ஆஹா என்று அந்தப் படம் ஓடாவிட்டாலும், போட்ட காசை எடுத்துவிட்டார். இதனை வைத்துக் கொண்டு துப்பறிவாளன் பாகம் 2 எடுக்க விஷால் முனைகிறார். அவர் சுமார் 13 பேரை அழைத்துக்கொண்டு, லொக்கேஷன் பார்கச் சென்றுள்ளாரம்.

அதனை முடித்துவிட்டு, தற்போது சென்னை திரும்பியுள்ள விஷால், பைனாஸ்ரை தேடிவருகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே லைக்கா தயாரிப்பு நிறுவனத்திடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமல், அதுவேறு பெரிய பஞ்சாயத்தில் உள்ளது. இந்த நிலையில் விஷாலுக்கு யார் பைனாஸ் பண்ணுவார்கள் என்பது தெரியவில்லை.

ஆனால் துப்பறிவாளன் படம் 2 நல்ல படியாக அமையும், அருமையான கதை என்னிடம் உள்ளது என்று சொல்லி பல பைனாசரை விஷால் அணுகி வருகிறாராம். யாராவது ஓகே சொன்னால் படத்தை உடனே எடுக்க ஆரம்பித்து விடுவார் என்று சொல்லப்படுகிறது. பணம் கிடைக்க வேண்டுமே ?