என் கணவரிடம் ஆசையாய் அத கேட்டேன்…. நினைவுகளை பகிர்ந்த மீனா!

என் கணவரிடம் ஆசையாய் அத கேட்டேன்…. நினைவுகளை பகிர்ந்த மீனா!

நடிகை மீனா 90ஸ் காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்தார். இவர் தமிழ், தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக பெயர் எடுத்தார்.

ரஜினி , கமல் என தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருந்து வந்த மீனா பெங்களூரை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரான வித்யாசாகர் என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். நைனிகா தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மீனாவின் கணவர் 2022 ஆம் ஆண்டு நுரையீரல் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். இதையடுத்து மீனா இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப்போவதாக வதந்திகள் வெளியான வண்ணம் இருந்தது.

இந்நிலையில் தற்போது நடிகை மீனா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கணவர் குறித்து பேசியுள்ளார். அதில், “என் சினிமா கெரியரில் என்னைவிட என் கணவர் தான் முக்கியத்துவம் கொடுத்தார். இது பண்ணலாம், அது பண்ணலாம் என்று கூறி வந்தார். திரிஷ்யம் படத்தில் நடிக்க அவர் எனக்கு அப்படி ஒத்துழைப்பு கொடுத்து நடிக்க வைத்தார்.

தெறி படத்தில் நைனிகா நடிக்கும் போது கூட, குழப்பத்தில் என்ன பண்ணுவது என்று யோசித்தோம். தப்பா, சரியா என்று சொல்லத் தெரியாமல், ஒரு மெமரியாக இருக்குமே என்பதால் இருவரும் யோசித்து தான் அவளை நடிக்க வைத்தோம்.

நான் சமைத்து என் கணவர் சாப்பிட்டு இருக்கிறார். சாகர் ஒரு நல்ல சமையல்காரர். என்னிடம் ஆசையாய் இதை செய்து கொடு என்று கேட்டதே இல்லை. ஆனால் நான் அவரிடம் ஆசையாய் கேட்டிருக்கிறேன். பண்ணி கொடுத்திருக்கிறார். ஸ்டீன் மீன் செய்து கொடுத்திருக்கிறார். என மீனா தந்து கணவர் பற்றிய அழகான நினைவுகளை பகிர்ந்துக்கொண்டார்.