80ஸ் காலத்தில் ஜொலித்த நடிகை ரேவதி…. 58 வயதில் இத்தனை கோடி சொத்து மதிப்பா ?

80ஸ் காலத்தில் ஜொலித்த நடிகை ரேவதி…. 58 வயதில் இத்தனை கோடி சொத்து மதிப்பா ?

தென்னிந்திய சினிமாவில் 80ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக ஜொலித்துக் கொண்டிருந்தவர் தான் நடிகை ரேவதி.இவர் தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து 90ஸ் காலகட்டத்தில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்தார் .

அந்த காலகட்டத்தில் பிரபலமான நடிகர்களான மோகன் ,பிரபு,கமல் ஹாசன் உள்ளிட்டவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ரேவதிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாக்கிக் கொண்டனர். இவருக்கு பல்வேறு திரைப்பட விருதுகளும் கொடுத்து கவுரவிக்கப்பட்டிருக்கிறது. இவர் கிட்டத்தட்ட ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்ட நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

1988 ஆம் ஆண்டு சுரேஷ் மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் ரேவதி கடந்த 2002 ஆம் ஆண்டில் மணமுறிவு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். இதனிடையே இவர்களுக்கு ஒரு மகளும் பிறந்தார்கள். நடிகை ரேவதிக்கு குழந்தை இல்லாத காரணத்தால் கணவர் அவரை விவாகரத்து செய்ததாக செய்திகள் வெளியாகியது.

கணவரை பிரிந்த பிறகு IVF மூலம் ஒரு குழந்தையை வளர்த்து வருகிறார். மேலும், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த ரேவதி நடிப்பில் வெளியாகிய திரைப்படங்களான தேவர் மகன், புதிய முகம், மௌனராகம், வைதேகி காத்திருந்தால், ஆண் பாவம், உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 58 வயதாகும் நடிகை ரேவதி தொடர்ந்து குணசித்திர வேடங்களில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் ரேவதியின் முழு சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நடிகை ரேவதியின் சொத்து மதிப்பு ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. கேரளாவில் கிளாசிக் லுக்குடன் ஒரு வீடு, அதன்விலை ரூ. 3 முதல் ரூ. 4 கோடி என கூறப்படுகிறது. அதேபோல் சென்னையில் வசிக்க ஹைடெக் வீடு, அதன்விலை ரூ. 5 கோடி இருக்குமாம். வீடு மட்டுமில்லாமல் 2 ஆடம்பர கார்களையும் வைத்துள்ளாராம்.