சிவக்குமாரின் முகத்திரையை கிழித்த நடிகை சுலோச்சனா..!!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்த நடிகை சுலோசனா பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் கூட நடித்திருக்கிறார்.

நடிகை சுலோசனா சிறு வயதில் இருந்தே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார். இதனை அடுத்து 1980 ஆவது ஆண்டில் “சுபோதையம்” என்ற தெலுங்கு திரைப்படத்தில் சந்திரமோகனோடு இணைந்து நடித்திருக்கிறார்.

தமிழைப் பொறுத்த வரை இவர் “தூறல் நின்று போச்சு” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். சுமார் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் ம.சு விசுவநாதனின் மகன் கோபி கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள்.

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் பேசிய சுலோசனா இன்று நீ நாளை நான், சிந்து பைரவி உள்ளிட்ட நான்குக்கும் மேற்பட்ட படங்களில் சிவகுமாருடன் இணைந்து நடித்திருப்பதாக கூறியவர், சிவகுமார் பற்றி சில பகீர் தகவல்களை வெளியிட்டு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டார்.

இது வரை மிகவும் சிறப்பான ஜென்டில்மேன் ஆக பார்க்கப்பட்ட சிவகுமாரை இவர் இப்படி கூறுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இதற்கு காரணம் சிவகுமார் தன்னை எப்போதெல்லாம் பார்க்கிறாரோ அப்போதெல்லாம் தத்தி, என்றும் பண்ணாட இங்கே வா என்று செல்லமாக திட்டுவார்.

அப்படி என்னை ஏன் திட்டுகிறார் என்பது இன்று வரை தனக்கு தெரியாது என்பதை பதிவு செய்திருக்கிறார்.

மற்ற நடிகைகளிடம் இவர் இவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்னிடம் மட்டும் தான் இப்படி நடந்திருக்கிறார். மேலும் அவர் நடிக்கக்கூடிய சமயத்தில் வசனங்களை எனக்கு எளிதில் புரியும் படி கற்றுக் கொடுப்பதோடு ஊக்கப்படுத்தி நடிக்க சொல்வார் என்று பேட்டியில் பகிர்ந்து இருப்பது பரவலாக பேசப்படுகிறது.

என்ன செய்து தான் தற்போது இணையத்தில் பரவலாக ரசிகர்களின் மத்தியில் பேசப்படுகின்ற செய்தியாக உள்ளது இதை அடுத்து இவர்கள் தங்களது நண்பர்களுக்கும் சிவக்குமார் இப்படி பேசினார் என்பதை கூறி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *