NO NATO membership: உக்ரைன் நெற்றியில் அடித்த Trump இனி எந்த உதவியும் இல்லை

சற்று முன்னர் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை, உக்ரைன் தலைவர் ஜிலன்ஸ்கியை அதிரவைத்துள்ளது.  நேட்டோவில் சேர உக்ரைனால் முடியாது. அமெரிக்கா ஆயுதங்கள் வழங்காது, மனிதாபிமான உதவிகள் இல்லை, மற்றும் நிதி உதவிகளும் இல்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது. இவை அனைத்துமே, ரஷ்ய அதிபர் புட்டினுடன் பேசிய பின்னரே ரம்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்: டிரம்ப் நிர்வாகம் இன்று அமெரிக்கா உக்ரைனுக்கான தங்கள் நிதி உதவியை குறைக்கிறது என்று அறிவித்துள்ளது. இந்த மாற்றம், அமெரிக்காவின் வெளி நீதிக் கொள்கையில் ஒரு முக்கியமான மாற்றத்தைக் குறிக்கிறது. இதன் மூலம், உக்ரைனுக்கான இராணுவ மற்றும் மனிதாபிமான உதவிகளில் பெரும் பகுதியை ஐரோப்பிய நாடுகள் ஏற்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் இந்த முடிவை அறிவிக்கையில், “அமெரிக்கா இனி ஐரோப்பிய நாடுகளுடன் சமநிலையற்ற கூட்டணியை ஏற்காது” என்று கூறினார். அவர் மேலும், “உக்ரைனுக்கான உதவிகளில் ஐரோப்பா முன்னணி பங்கை ஏற்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். இந்த முடிவு, கடந்த 75 ஆண்டுகளாக ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு அமெரிக்கா முக்கிய பங்காற்றியதில் இருந்து ஒரு திருப்பத்தைக் குறிக்கிறது.

இந்த அறிவிப்பை, புட்டினே எதிர்பார்க்கவில்லை. இதனால் தற்போது உக்ரைன் மீது ரஷ்யா கடுமையாக தாக்குதலை நடத்தக் கூடும் என்று எதிர்வு கூறப்படுகிறது.

**டிரம்ப்-புடின் உரையாடல்: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உடனடி பேச்சுவார்த்தைகள்**

இதேநேரம், டிரம்ப் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில்  Russia குடியரசுத் தலைவர் விளாடிமிர் புடினுடன் நீண்ட உரையாடல் நடத்தியதாக தெரிவித்தார். இரு தலைவர்களும் உடனடியாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஒப்புக்கொண்டதாகவும், இது குறித்து உக்ரைன் தலைவர் வோலோடிமிர் , ஜெலென்ஸ்கிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு செயலாளர் ஹெக்ஸெத், உக்ரைனில் எந்தவொரு சமாதான ஒப்பந்தத்தையும் செயல்படுத்த அமெரிக்கா துருப்புக்களை அனுப்பாது என்றும் தெரிவித்தார். இது, ஜெலென்ஸ்கியின் முக்கிய கோரிக்கையான பாதுகாப்பு உறுதிமொழிகளை பாதிக்கக்கூடிய நிலை என்று பலரது கருத்து.

இந்த முடிவுகள், உக்ரைன் மற்றும் உலக அரசியலில் பரவலான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. ஐரோப்பிய நாடுகள் இந்த புதிய பொறுப்பை எவ்வாறு ஏற்கின்றன என்பதே இனி கவனத்தின் மையமாக உள்ளது.

Source : https://edition.cnn.com/2025/02/12/politics/hegseth-ukraine-rules-out-nato-membership/index.html