இந்நியாவில் 02 வது நாளாகத் தொடரும் பிரபல விளையாட்டு வீரர்களின் ஆர்ப்பாட்டம்…. அரசுத் தீர்வு வழங்குமா!!!

இந்த செய்தியை பகிர

இந்தியாவின் டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகப் பிரபல மல்யுத்த வீராங்கணைகளான வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்ட 200 வீரர்கள் தங்களது கோரிக்கைக்குத் தீர்வு தர வேண்டும் எனத் தெரிவித்து போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றனர்.

அதாவது இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பா.ஜனதா எம்பியுமான பிரிஜ் பூஷண் மீது பாலியல் புகார் தெரிவித்து இதற்குத் தகுந்த விசாரணை நடாத்தப்பட வேண்டும் எனக் கோரி இந்தியாவின் முன்னணி விளையாட்டு வீரர்கள் ஒன்றினைந்து மேற்படி போராட்டத்தினை நடாத்தி வருகின்றனர். இந்நிலையில் இதனைக் கையில் எடுத்த மத்திய விளையாட்டு அமைச்சகம் இப்பிரச்சினை தொடர்பாக முழுமையாக விசாரணை நடாத்தி அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தது.


இந்த செய்தியை பகிர