மணப்பெண் இவர் தான்… தடபுடலாக நடைபெறும் தனுஷின் மறுமணம்!

மணப்பெண் இவர் தான்… தடபுடலாக நடைபெறும் தனுஷின் மறுமணம்!

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார் . அவரின் முதல் படம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கினாலும் தொடர்ந்து மிகச்சிறந்த திரைப்படங்களில் நடித்து தற்போது திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், சிறந்த பாடகர் ,திரைக்கதை ஆசிரியர், இப்படி பண்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார்.

இவர் தமிழை தாண்டி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். இதனிடையே 2004ம் ஆண்டு ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை திருமணம் செய்து கொண்டார். 18 வருட வாழ்க்கையை தற்போது முடிவுக்கு கொண்டு வந்து விட்டார்கள் இந்த ஜோடி. கடந்த 6 மாத காலமாக பிரிந்து வாழும் இவர்கள் அண்மையில் முறையாக விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்கள் .

இப்படியான நேரத்தில் தனுஷின் மறுமணம் வேலைகள் தடபுடலாக நடைபெற்று வருகிறதாம். அவரது அப்பா கஸ்தூரி ராஜா சினிமாத்துறையை சேர்ந்த பெண்ணே வேண்டாம் என தனது உறவுக்கார பெண் ஒருவரை பார்த்து நிச்சயம் செய்து இருப்பதாகவும் விரைவில் அவர்களது திருமணம் நடைபெறும் எனவும் அரசல் புரசலாக செய்தி வெளியாகியிருக்கிறது. அதேபோல் ஐஸ்வர்யா லால் சலாம் திரைப்படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றி ஒருவரை மறுமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.