ஐயோ கருமம்….. தங்க டாய்லெட்டில் அலப்பறை பண்ணும் ஜிபி முத்து -தீயாக பரவும் வீடியோ!

ஐயோ கருமம்….. தங்க டாய்லெட்டில் அலப்பறை பண்ணும் ஜிபி முத்து -தீயாக பரவும் வீடியோ!

டிக்டாக் ஆப் மூலம் ஆபாசமான காமெடியை தனது காமெடி ஆனா பேச்சால் கலகலப்பாக பேசி அனைவரையும் சிரிக்கவைத்தவர் ஜிபி முத்து. கிராமத்து பேச்சுவாக்கில் இரட்டை அர்த்தத்தில் செம காமெடியாக பேசி மிகக்குறுகிய காலத்திலே பிரபலம் ஆனவர் ஜிபி முத்து.

இதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆன ஜிபி முத்துவுக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது பணம், புகழ் என அனைத்தும் கிடைத்தும் பழசை மறக்காமல் இன்னமும் அதே வெகுளித்தனத்துடன் இருப்பது தான் அனைவரையும் கவர்ந்தது. இதனிடையே இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்துக்கொண்டார்.

இந்நிலையில் சென்னையில் புதிதா இ ஸ்பா சலூன் ஒன்றை திறந்துள்ளார். அங்கு தங்கத்தால் ஆன டாய்லெட் வைக்கப்பட்டுள்ளதை ஜி.பி. முத்து பாத்ரூம் டூர் நடத்தியுள்ளார். அதன் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

தங்கத்தால் ஆன டாய்லெட், ஆட்டோமெடிக்காக திறக்கும் சென்சார் டாய்லெட் என ஏகப்பட்ட விஷயங்களை ஜி.பி. முத்து தன்னுடைய பாணியில் எக்ஸ்ப்ளோர் செய்திருப்பது தான் அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது. நல்லா பட்டு வேட்டி பட்டு சட்டை அணிந்துக் கொண்டு தங்க டாய்லெட்டில் அமர்ந்து அவர் செய்துள்ள அலப்பறை வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ: