காண்டா மிருகத்தை கட்டி இழுத்த ஹரி.. பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்ட கதை !

காண்டா மிருகத்தை கட்டி இழுத்த ஹரி.. பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்ட கதை !

பிரித்தானிய அரச குடும்பத்தில் பிறந்து, மிகவும் செல்வாக்கோடு வாழ்ந்து வந்த இளவரசர் ஹரி பின்னர் மெகான் மார்கிள் என்ற வயது கூடிய அதுவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவரை திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர், தனது மனைவியை அரச குடும்ப அங்கத்தவர்கள் மரியாதை குறைவாக நடத்துகிறார்கள். நிற வேற்றுமை பார்கிறார்கள் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி, மாளிகையில் இருந்து வெளியேறியது மட்டும் அல்லாது.

நாட்டை விட்டே விலகிச் சென்று அமெரிக்காவில் செட்டில் ஆனால். அடிக்கடி பிரித்தானிய அரச குடும்பத்தைப் பற்றி, அதாவது தனது சொந்தக் குடும்பத்தைப் பற்றியே தரக் குறைவாக பேசியும், புத்தகம் எழுதியும் மில்லியன் கணக்கில் பணம் சம்பாதித்தார். அவருக்கும் அவரது மனைவி மெகான் மார்கிளுக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை ஈகோ தான். எப்படி என்றாலும் அண்ணா , வில்லியத்தை விட தான், முன்னணியில் இருக்கவேண்டும் என்பதே ஹரியின் நோக்கமாக இருக்கிறது.

இதனால் இவர் சற்றும் யோசிக்காமல் செய்யும் சில காரியங்கள் பெரும் சர்சையில் முடிவது வளக்கம். தற்போது ஆபிரிக்காவில், உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றிற்காக , அவர் பரப்புரையில் ஈடுபட்டார். காண்டா மிருகம் ஒன்றை கட்டி இழுத்து, புகைப்படம் காட்டி, ஆபிரிக்காவில் உள்ள விலங்குகளுக்கு தாம் உதவுவது போலவும், அந்த தொண்டு நிறுவனம் உதவுவது போலவும் காட்சிப் படுத்தினார். ஆனால் அந்த தொண்டு நிறுவனம், விலங்குகளுக்கு உதவுவது போல பெரும் நாடகமாடி. விலங்குகளைக் கொன்று குவித்து, அதன் தோல், தந்தம், நகங்கள் என்று அனைத்து உறுப்புகளையும் விற்று காசாக்கியுள்ள விடையம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனால் இளவரசர் ஹரி மீது பெரும் புகார்கள் எழுந்துள்ளது. எப்படி இளவரசர் ஹரி இது போன்ற கப்ஸா தோண்டு நிறுவனங்களுக்கு பக்கபலமாக இருக்கிறார் என்று மக்கள் கேள்விகளை எழுப்பி, கிழி கிழி என்று கிழித்து ஹரியை தொங்கப்போட்டுள்ளார்கள். இனியாவது திருந்துவாரா இளவரசர் ஹரி ?