குழந்தைகளை விட்டுட்டு ஜாலியா ரொமான்ஸ் பண்ணும் நயன் – விக்கி ஜோடி!

குழந்தைகளை விட்டுட்டு ஜாலியா ரொமான்ஸ் பண்ணும் நயன் – விக்கி ஜோடி!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வளர்ந்து கொண்டு இருப்பவர்கள் நயன்தாரா விக்னேஷ் சிவன் இவர்கள் இருவரும் நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து காதலிக்கத் தொடங்கி பின்னர் எட்டு வருடம் கழித்து பெற்றோர் சம்பந்தத்துடன் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்த ஜோடி தற்போது தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஜோடியாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். இதனுடையே நயன்தாரா திருமணமாகி ஒரு சில மாதத்திலே வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.

அவ்வப்போது தனது மகன்களுடன் எடுத்துக் கொள்ளும் கியூட்டான போட்டோக்களை வெளியிட்டு என் உலகமே உயிர் உலக் தான் எனக் கூறி பல்வேறு பதிவுகளை இட்டு வருவதை நாம் பார்த்திருக்கிறோம் இந்நிலையில் தற்போது கொஞ்சம் வித்தியாசமாக குழந்தைகளை விட்டுவிட்டு நயன்தாரா விக்னேஷ் சிவன் மட்டும் தனியாக ஜோடியாக நின்று ரொமான்ஸ் செய்து போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக தீயாய் பரவி வருகிறது.

நயன்தாரா அழகான காட்டன் சேலை அணிந்தும் விக்னேஷ் சிவன் வேஷ்டி சட்டையில் பக்காவாகவும் இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மிகச் சிறந்த ஜோடியாக மீண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்கள். இந்த போட்டோவுக்கு தாறுமாறான லைக் குவிந்து வருகிறது.