பாலஸ்தீன் கொடியை உதையப் போய் Booby trap வெடி குண்டில் சிக்கிய இஸ்ரேல் படை சிப்பாய் !

பாலஸ்தீன் கொடியை உதையப் போய் Booby trap வெடி குண்டில் சிக்கிய இஸ்ரேல் படை சிப்பாய் !

வெஸ்ட் பேங் கரையில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியில் ஒரு இடத்தில் பாலஸ்தீனிய கொடி பறந்து கொண்டு இருந்துள்ளது. இது ஒரு பொறி என்று சற்றும் உணராத இஸ்ரேல் படையின் சிப்பாய் ஒருவர், அருகே சென்று அதனை காலால் உதைந்துள்ளார். கொடிக் கம்பத்திற்கு கீழே குண்டு ஒன்று பொருத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது. அது திடீரென வெடித்ததில் குறித்த சிப்பாய் படுகாயம் அடைந்துள்ளார்.

இப்படியும் பழி வாங்குகிறார்கள் பாலஸ்தீனர்கல் என்பது தான் பெரும் புதிராக உள்ளது. பல ஈழத் தமிழர்களுக்கு நினைவிருக்கும், இந்திய அமைத்திப் படை யாழ் வந்தவேளை. அவர்களுக்கும் புலிகளுக்கும் இடையே போர் மூண்டது. யாழ்ப்பாணத்தை இந்திய ராணுவம் கைப்பற்றிய பின்னர். அவர்கள் பூட்டி இருக்கும் வீடுகளுக்குச் சென்று, அங்கே இருக்கும் TV தொடக்கம் டாச் லைட் வரை திருடுவார்கள். இதனை அறிந்த புலிகள்.

பல TVக்களில் வெடி குண்டை பொருத்தி இருந்தார்கள். அதுபோல டாச் லைட்டிலும் வெடி குண்டை பொருத்தி வைத்தார்கள். இதனைக் களவாடிச் சென்ற இந்திய ராணுவம் அதனை இயக்க முற்பட்டவேளை அது வெடித்து, தளத்தில் பலர் இறந்து போனார்கள். பலருக்கு இந்தச் சம்பவம் நினைவில் இருக்கலாம்.

கீழே வீடியோ இணைப்பு.   Source : https://www.dailymail.co.uk/news/article-13335641/Horrifying-moment-IDF-reservist-injured-setting-booby-trap-bomb-trying-kick-Palestinian-flag-West-Bank.html