ரூ. 800 கோடி பட்ஜெட்டில் உருவான “கல்கி 2898 AD” பிரம்மாண்ட ட்ரெய்லர்!

ரூ. 800 கோடி பட்ஜெட்டில் உருவான “கல்கி 2898 AD” பிரம்மாண்ட ட்ரெய்லர்!

வரலாற்று புகழ் பெற்ற திரைப்படமான பாகுபலி படத்தின் ஹீரோவான பிரபாஸ் நடிப்பில் உருவாக இருக்கும் கல்கி திரைப்படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி இந்தியா முழுக்க ட்ரெண்டிங்கில் இருந்த வருகிறது .

மிக பிரம்மாண்டமாக கிட்டத்தட்ட ரூ. 800 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், பிரபாஸ் , கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். அமெரிக்கா வரை சென்று காமிக்கான் மூலமாக ப்ரமோஷன் செய்த படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகிய படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.

இத்திரைப்படத்தை நாக் அஷ்வின் இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார் இப்படத்தில் பிரபாஸ் உடன் ஜோடியாக தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் பயங்கரமான வில்லன் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.