வங்கிகளின் தன்னியக்க இயந்திரத்தின் ஊடாக அதிகளவிலான பணம் கொள்ளை….. வெளிநாட்டவர்களும் தொடர்பு!!!!

இந்த செய்தியை பகிர

காலி பிரதேசசத்தில் அமைந்துள்ள மூன்று பிரதான அரச வங்கிகளில் கோடிக்கணக்கான பணம் திருடப்பட்டுள்ளதாகவும், திருடர்களை கைது செய்வதற்காக அதிவிசேட பொலிஸ் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொள்ளைச் சம்பவமானது அதிகாலை 1.30 மணியில் இருந்து 4.30 மணிக்குள் பதிவாகியுள்ளதாகவும், கார் ஒன்றில் வந்த கும்பல் ஒன்றே இவ்வாறு கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதாவது, இவர்கள் அதி நவீன தொழிநுட்ப கருவி ஒன்றினை தன்னியக்க இயந்திரத்தில் பொருத்தி அதன் தொழிற்பாட்டினை தடை செய்துவிட்டு பணத்தினை திருடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த கும்பலில் இரு வெளிநாட்டவர்கள் உள்ளடங்குவதாகவும் அவர்கள் மூலமாகவே இவ் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை கைது செய்ய சி.ஜ.டி சிறப்புக் குழு விசாரணையினை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியை பகிர