மஹா ராஜா ஹிட் விஜய் சேதுபதி காட்டில் கடும் மழை தான் வரிசை கட்டும் இயக்குனர்கள்

மஹா ராஜா ஹிட் விஜய் சேதுபதி காட்டில் கடும் மழை தான் வரிசை கட்டும் இயக்குனர்கள்

கடந்த சில வருடங்களாகவே விஜய் சேதுபதி நடித்த எந்தப் படங்களும் சரியாக ஓடவே இல்லை. இவர் ஒரு ராசி இல்லாத நடிகர் என்று தான் சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபட்டுக் கொண்டு இருந்தது. சில தாயாரிப்பாளர்கள் ஏற்கனவே அட்வான்ஸ் பணம் கொடுத்து இருந்தார்கள். ஆனால் அவர் படங்கள் எல்லாமே இறங்கு முகமாக இருந்ததால், தயாரிப்பாளர்கள் தயக்கத்தில் இருந்தார்கள். கொடுத்த காசை திருப்பிக் கேட்க்கவும் முடியாமல் தயக்கத்தில் இருந்தார்கள்.

ஆனால் சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியான, “மஹா ராஜா” படம் சக்கைப் போடு போட்டுள்ளது. படம் பெரும் வெற்றி. இதனால் தற்போது தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நின்று, தனது படத்தில் நடிக்கும் படி கேட்டு வருகிறார்களாம். விஜய் சேதுபதி காட்டில் அடை மழை தான் என்கிறார்கள்.