முழுக்க முழுக்க கருப்பு வெள்ளையில் ரிலீஸ் ஆகும் மம்மூட்டியின் புதிய படம்!

முழுக்க முழுக்க கருப்பு வெள்ளையில் ரிலீஸ் ஆகும் மம்மூட்டியின் புதிய படம்!

கடந்த சில ஆண்டுகளாக வித்தியாசமான கதைக்களன்களை தேடி நடித்து வருகிறார் மம்மூட்டி. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புழு, கண்ணூர் ஸ்குவாட் மற்றும் காதல் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றன.

இந்நிலையில் இப்போது அவர் நைட் வாட்ச் புரொடக்‌ஷன் சார்பில் சசிகாந்த் தயாரிக்கும் பிரம்மயுகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். பேய் திரில்லர் வகைப் படமாக இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை பூதகாலம் படத்தை இயக்கிய ராகுல் சதாசிவன் இயக்கியுள்ளார்.

பிப்ரவரி 15 ஆம் தேதி வெளியாகும் இந்த படம் முழுக்க முழுக்க கருப்பு வெள்ளையில் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. த்ரில்லர் படமாக உருவாகியுள்ள பிரம்மயுகம் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை இந்த அறிவிப்பு எகிறவைத்துள்ளது.