இளைஞர்களைக் கவர்ந்த மணிகண்டனின் லவ்வர் திரைப்படம்.. முதல் வார கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

இளைஞர்களைக் கவர்ந்த மணிகண்டனின் லவ்வர் திரைப்படம்.. முதல் வார கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

கடந்த ஆண்டு மே மாதம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும் குவித்தது. இதையடுத்து அதே தயாரிப்பு நிறுவனத்துக்கு மணிகண்டன் லவ்வர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்ட போதே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. படத்தில் டாக்ஸிக் காதலராக மணிகண்டன் நடித்திருந்தார். தன்னுடைய கேரியர், காதல் வாழ்க்கை தொடர்பான தடுமாற்றங்களில் அவர் எவ்வளவு மோசமானவராக நடந்து கொள்கிறார், அதில் இருந்து எப்படி வெளிவருகிறார் என்பதை சொல்லி இருந்தது லவ்வர் திரைப்படம்.

படத்தின் இரண்டாம் பாதியில் சில குறைகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் படம் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது. இந்நிலையில் முதல் மூன்று நாட்களில் இந்த படம் 2.75 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரத்தில் படம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்குமானால் வெற்றிப் படமாக அமையும் என சொல்லப்படுகிறது.