நீ எல்லாம் ஒரு ஆளு… உன் கூட நடிக்கணுமா? அஜித்தை அசிங்கப்படுத்திய மீனா?

நீ எல்லாம் ஒரு ஆளு… உன் கூட நடிக்கணுமா? அஜித்தை அசிங்கப்படுத்திய மீனா?

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகராக இருந்து வரும் நடிகர் அஜித் முழுக்க முழுக்க தனது உழைப்பால் மட்டும் முன்னணி நடிகராக உச்ச அந்தஸ்தை பெற்றிருக்கிறார். இவர் வளர்ந்து வந்த காலத்தில் பல இடங்களில் அவமானப்பட்டு அசிங்கப்பட்டு அதான் இந்த உயரத்திற்கு வந்திருக்கிறார்.

அப்படித்தான் ஒருமுறை நடிகை மீனா அஜித்துடன் சேர்ந்து ஆனந்த பூங்காற்றே திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அப்போது மீனா அஜித்தை காட்டிலும் மிகப்பெரிய அளவில் மார்க்கெட் கொண்ட ஒரு நடிகையாக இருந்து வந்தார்.அந்த சமயத்தில் விருது விழாவில் அஜித்திற்கு மீனா விருது கொடுக்க அந்த மேடையில் இருவரும் இணைந்து நடனம் ஆட வேண்டும் என கேட்டிருக்கிறார்கள்.

அப்போது அதைக் கேட்டதும் கீழே அமர்ந்து கொண்டு இருந்த மீனாவின் அம்மா கடும் கோபம் அடைந்து கிடு கிடுவென எழுந்து வந்து மீனாவை கையை பிடித்து இழுத்துச் சென்றாராம். அஜித் கமல் கூட எல்லாம் நடிக்கும் அந்தஸ்தில் இருக்கும் என் மகள் இப்படிப்பட்ட மார்க்கெட்டில் ஒரு நடிகருடன் நடனம் ஆடுவதா? என்ற தொனியில் அவர் அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார்.

அந்த சமயத்தில் உடனே அஜித் முகம் சுளித்து விட்டாராம். அதை பார்த்த மீனாவும் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்?என தன் அம்மாவிடம் கேட்டுள்ளார். ஆனால் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாத அது தொடர்ந்து மீனா உடன் சிட்டிசன் மற்றும் வில்லன் உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் தான் நடிக்க வேண்டும் என கேட்டு கமிட் செய்தாராம். இன்று அதே அஜித் எந்த அந்தஸ்த்தில் இருக்கிறார் பாருங்க.