14 வயது மாணவி நெஞ்சில் கத்தியால் குத்திய அப்பா அம்மா- பொலிசார் உளவு பார்த்த விதம் குலை நடுங்கும் சம்பவம்

14 வயது மாணவி நெஞ்சில் கத்தியால் குத்திய அப்பா அம்மா- பொலிசார் உளவு பார்த்த விதம் குலை நடுங்கும் சம்பவம்

பிரித்தானியாவின் டியூரஹாம் பகுதியில் நடந்த கொலை ஒன்று, குறித்த நகரத்தை மட்டும் அல்ல, முழு பிரித்தானியாவையும் அதிரவைத்துள்ளது. வெள்ளிக் கிழமை இரவு 11 மணி அளவில், பொலிசாரை தொடர்பு கொண்ட , சிமர் விக்கர்ஸ்(அப்பா) தனது மகளை யாரோ கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவித்தார். இதேவேளை அம்மாவும் பொலிசாரிடம் இதே மாதிரி தெரிவித்து இருந்தார். ஷரலொட் என்னும் வெறும் 14 வயதே நிரம்பிய மாணவி, ரத்த வெள்ளத்தில் இருந்தார்.

அவரை யாரோ நெஞ்சில் கத்தியால் குத்தி இருந்தார்கள். ஒரே ஒரு கத்திக் குத்து தான். ஆனால் அது சரியாக நெஞ்சில் பாய்ந்துள்ளது. பரா மெடிக்ஸ் வைத்தியர்கள் வந்து ஷரலட்டை உயிர்பிழைக்க கடுமையாகப் போராடினார்கள். ஆனால் அந்த 14 வயது ஷரலட் பரிதாபமாக உயிர் இழந்தார். சில மாதங்களாக கடும் விசாரணையில் இறங்கிய பொலிசாரால், எதனையும் கண்டு பிடிக்கவே முடியவில்லை. இன் நிலையில் இந்த வழக்கு ஸ்காட்லன் யாட்டுக்கு மாற்றப்பட்டது. சும்மா விடுவார்களா அவர்கள் ?

களத்தில் ஸ்காட்லன் யாட் புலனாய்வாளர்கள் குதித்து பெரும் விசாரணையில் ஈடுபட்டதோடு, தடையங்களையும் தேட ஆரம்பித்தார்கள். இன் நிலையில் தான், 14 வயது மாணவி ஷரலட்டை கொலை செய்தது அவரது சொந்த அப்பா அம்மா தான் என்பது, துலங்கியது. அனைவருக்கும் அதிர்ச்சி தான். ஏன் நடந்தது ? எதற்காக நடந்தது என்பது மட்டும் தான் புரியவில்லை, ஆனால் கொலை செய்தது அவரது சொந்த அப்பா மற்றும் அம்மா என்பதனை ஸ்காட்லன் யாட் பொலிசார் கண்டறிந்துள்ளார்கள். இதனை அடுத்து அவர்கள் அப்பாவையும் அம்மாவையும் நீதிமன்றில் நிறுத்தியுள்ளார்கள். இப்படியும் சில பெற்றோர்கள் ?