திமுகவிற்கு மக்கள் ஆதரவானது மணிக்கு மணி குறைவடைந்து வருகின்றது….. ஜி.கே.வாசன்!!!

இந்த செய்தியை பகிர

வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் எங்களது முதன்மைக் கட்சியான அதிமுக மகத்தான வெற்றிவாகை சூடும் எனவும் இதற்காகத் தாங்கள் ஒன்றினைந்து செயற்படுவதாகவும், திமுகவிற்கு உள்ள மக்கள் ஆதரவானது மணிக்கு மணி குறைவடைந்து கொண்டு செல்வதாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதற்கான முதல் வெற்றியாக வருகின்ற ஈரோடு இடைத் தேர்தலில் தெரியும் எனவும் அது வருங்கால வளர்ச்சிக்குரிய அடித்தளம் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தற்பொழுது தமிழ் நாட்டில் முதன்மைக் கட்சியாக அதிமுக மீண்டும் அவதாரம் எடுத்துள்ளது எனவும் தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக முற்றாக மக்கள் ஆதரவினை இழந்துள்ளது எனவும் தெரிவித்த ஜ.கே.வாசன், இந்த இடைத்தேர்தலில் பாஜக கட்சியின் முழுமையான ஆதரவு அதிமுகவிற்கு கிடைக்கும் எனவும் தெரிவித்தார். அத்துடன் வரும் பாராளுமன்றத் தேர்தலில் அம்மா இன்றி இரட்டை இலைச் சின்னத்தில் இறங்கவுள்ள வேட்பாளர் தமிழ் நாட்டின் மண்ணின் மைந்தனாகத் திகழ்வார் எனவும் தெரிவித்தார்.


இந்த செய்தியை பகிர