விக்கி – நயன் ஜோடியை தொடர்ந்து வெளிநாட்டில் லூட்டியடிக்கும் பிரியா அட்லீ!

விக்கி – நயன் ஜோடியை தொடர்ந்து வெளிநாட்டில் லூட்டியடிக்கும் பிரியா அட்லீ!

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வலம் கொண்டிருப்பவர்கள் அட்லீ – பிரியா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். 2014ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது .

கிட்டத்தட்ட 10 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த அட்லீ பிரியா ஜோடிக்கு கடந்த வருடம் தான் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்புக்கு பிறகு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்து வரும் இந்த ஜோடி அவ்வப்போது கிடைக்கும் நேரங்களில் அவுட்டிங் சென்று ஜாலியாக நேரத்தை கழித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது வெளிநாட்டில் பிரியா மற்றும் அட்லீ ட்ரிப் அடித்து கொண்ட புகைப்படங்களை instagram-ல் வெளியிட அது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. முன்னதாக அட்லீயின் மாஸ்தான. ஹீரோயின் ஆன நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் ஒருவன் மற்றும் குழந்தைகளுடன் குடும்பமாக வெளிநாட்டில் சென்று ஜாலியாக நேரத்தை செலவிட்டு புகைப்படங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை பார்த்த நெட்டிசன்ஸ் நயன்தாராவை தொடர்ந்து நீங்களும் கிளம்பிட்டீங்களா எனக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள். முன்னணி இயக்குனர் ஆன அட்லீ முதன் முதலில் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி திரைப்படங்களை எடுக்கும் நேக்குகளை கற்று தெரிந்து பின்னர் ராஜா ராணி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

தொடர்ந்து தெறி , மெர்சல், பிகில் உள்ளிட்ட தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களை இயக்கி தற்போது முன்னணி இயக்குனராக இடத்தை பிடித்திருக்கிறார். கடைசியாக ஷாருக்கான் வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி பெற்றார்.