பிரியா பவானி ஷங்கரின் அடாவடி 30 நிமிடம் தான் நிற்பேன் என்று சிங்கப்பூரில் அலப்பறை செய்துள்ளார்

பிரியா பவானி ஷங்கரின் அடாவடி 30 நிமிடம் தான் நிற்பேன் என்று சிங்கப்பூரில் அலப்பறை செய்துள்ளார்

சிங்கப்பூரில் வேலை செய்யும் இந்தியர்களை மகிழ்விக்க என, அங்கே ஒரு இசைநிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதில் பாடகர் ஸ்ரீனிவாஸ் கலந்துகொண்டுள்ளார். அத்தோடு ஒரு நடிகையை, நிகழ்ச்சிக்கு கொண்டு வந்தால் நல்லது என்று கருதிய, ஏற்பாட்டாளர்கள் பிரியா பவானி ஷங்கரை அணுகியுள்ளார்கள். தான் அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும், பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டை போட்டால் தான் வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏற்பாட்டாளர்கள் அவருக்கு பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டை பெரும் செலவில் போட்டுக் கொடுத்துள்ளார்கள். இதேவேளை சென்னையில் இருந்து சாதாரண எக்கனமி கிளாஸில் தான் பாடகர் ஸ்ரீனிவாஸ் சிங்கப்பூர் சென்றுள்ளார். சிங்கப்பூர் வந்த பிரியா பவானி ஷங்கர், அடுத்த நாள் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் தான் வெறும் 30 நிமிடம் மட்டுமே இருப்பேன் என்றும். என்ன பேசவேண்டும் என்று எல்லாம் எனக்கு சொல்லித் தர வேதை இல்லை. என்ன பேசவேண்டும் என்பது எனக்குத் தெரியும் என்று மிகவும் எகத்தாளமாக கூறியுள்ளார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொல்ல வந்ததைக் கூட அவர் காதுகொடுத்து கேட்க்கத் தயாராக இல்லையாம். சொல்லி வைத்தால் போல அடுத்த நாள் நடந்த நிகழ்ச்சியில் வெறும் 30 நிமிடங்கள் இருந்துவிட்டு, தனது உரையை பேசிவிட்டு உடனே கிளம்பிச் சென்றுவிட்டாராம் பிரியா பவானி ஷங்கர். அட நம்ம பிரியாவா இப்படி ? ஆளே மாறீட்டாங்களே, நாம் நினைத்த பிரியா பவானி ஷங்கர் இவர் இல்லை என்று பின்னர் தான் சிங்கப்பூர் வாசிகள் உணர்ந்துள்ளார்கள்.