VJ பிரியங்காவின் தந்தையா இது? இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ!

VJ பிரியங்காவின் தந்தையா இது? இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ!

தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளியனியான விஜே பிரியங்கா விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளியாக பெயர் எடுத்தார் பிரியங்கா தேஷ்பாண்டே. மாகாபா ஆனந்தின் நெருங்கிய தோழி என்பதால் அவரின் மூலமாகத்தான் இவருக்கு வாய்ப்பே கிடைத்தது.

விஜய் டிவியில் அறிமுகமான புதிதிலேயே கலகலப்பான பேச்சும், காமெடி மற்றும் எதார்த்தமான உரையாடல் உள்ளிட்டவற்றால் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்த தொகுப்பாளியாக பெயர் எடுத்தார். இதனால் அவருக்கு அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக், சூப்பர் சிங்கர் ஜூனியர், குக் வித் கோமாளி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்று வருகிறார்.

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானார் பிரியங்கா. இந்நிலையில் விஜே பிரியங்கா தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் தான் சிறுவயதில் எடுத்துக் கொண்ட மிக மகிழ்ச்சியான புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இந்த புகைப்படம் இணயத்தில் வைரலாகி வருகிறது. பிரியங்கா சிறுவயதாக இருந்தபோதே அவரது தந்தை இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. தன் தாயின் அரவணைப்பில் தான் பிறந்து வளர்ந்து தற்போது நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.