சௌந்தர்யா இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்… லேட்டஸ்ட் தகவல்!

சௌந்தர்யா இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்… லேட்டஸ்ட் தகவல்!

ரஜினிகாந்தின் இளையமகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்தை இயக்கி தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு தனுஷ் நடித்த வேலையிலலாத பட்டதாரி 2 படத்தை இயக்கினார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் கோவா உள்ளிட்ட திரைப்படங்களையும் தயாரித்திருந்தார். ஆனால் அவர் தயாரித்த படங்கள் வணிக ரீதியில் தோல்வி அடைந்ததால் தொடர்ந்து தயாரிப்பைக் கைவிட்டார்.

இதையடுத்து சினிமாவில் இருந்து ஒரு பிரேக் எடுத்துக்கொண்ட அவர் இப்போது மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் அல்லது ஜி வி பிரகாஷ் இசையமைப்பார் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக் சொல்லப்படுகிறது. ரஜினி தன்னுடைய மூத்தமகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.