ரம்பா வாழ்க்கையை வேரோடு அழித்ததே அந்த பிரபல நடிகை தான் – அதிரவைத்த பிரபலம்!

ரம்பா வாழ்க்கையை வேரோடு அழித்ததே அந்த பிரபல நடிகை தான் – அதிரவைத்த பிரபலம்!

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்தவர் தான் நடிகை ரம்பா. இவர் தமிழ், தெலுங்கு ,மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி, போஜ்புரி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை 90ஸ் காலகட்டத்தில் பெற்றிருந்தார் .

இவரது நடனத்தை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள். இவரது தொடையழகுக்கும் அவரது கவர்ச்சி அழகை ரசிக்கவும் திரையுலகில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்தார்கள். குறுகிய காலத்திலேயே ஃபேமஸான நடிகையாக பார்க்கப்பட்ட ரம்பாவுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தார்கள்.

நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்து ஓடிக்கொண்டிருந்தார். ரம்பா வாழ்க்கை திடீரென சறுக்கலை சந்தித்து ஆள் அட்ரஸ் இல்லாத அளவுக்கு சினிமா பக்கமே தலைகாட்ட முடியாத அளவுக்கு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கை செட்டில் ஆகிவிட்டார்.

இதற்கான முக்கிய காரணம் என்ன? அப்படி என்ன நடந்தது? யார் இதற்கு காரணம் என்பது குறித்த தகவல் தற்போது இணையத்தில் கசிந்து வைரல் ஆகி வருகிறது. ஆம், இது குறித்து பேசி உள்ள பிரபல பிரபல விமர்சகரான செய்யாறு பாலு நடிகை ரம்பா திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருந்தபோது தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஒரு ஆசை அவருக்கு வந்து விட்டது.

அதன் மூலம் “த்ரீ ரோசஸ்”என்ற படத்தை தயாரிக்க ஆரம்பித்தார் நடிகை ரம்பா. அந்த திரைப்படத்தில். நடிகை ஜோதிகா ,ரம்பா, லைலா உள்ளிட்ட மூன்று பேர் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படத்தை அதிக பணம் போட்டு வட்டிக்கு கடன் வாங்கி நடிகை ரம்பா தயாரித்திருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த திரைப்படம் ஓடாமல் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.

இதனால் வாங்கின கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் மிகுந்த கடனாளியாகிவிட்டார் நடிகை ரம்பா. அந்த சமயத்தில் தான் வாங்கி வைத்திருந்த வீடு எல்லாவற்றையும் விற்று அந்த கடனை அடைத்து விட்டு பின்னர் சினிமா பக்கமே வர முடியாத அளவுக்கு அவர் பெரும் பொருளாதார நஷ்டத்தை சந்தித்தார்.

அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆனார் ரம்பா. பின்னர் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்து விட்டார். எனவே இவரது வாழ்க்கை அழிந்ததற்கு முக்கிய காரணமே “த்ரீ ரோசஸ்” திரைப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தில் லைலா மற்றும் ஜோதிகா நடித்து தோல்வி அடைந்ததும் கூடுதல் தகவல்.