ஐரோப்பா மீது தாக்குதல் நடத்தப்படும் புட்டின் பகிரங்கமாக அறிவித்துள்ளதால் பெரும் பதற்றம்

ஐரோப்பா மீது தாக்குதல் நடத்தப்படும் புட்டின் பகிரங்கமாக அறிவித்துள்ளதால் பெரும் பதற்றம்

உக்ரைன் மண்ணில் நேட்டோ படைகள் களம் இறங்கி, ரஷ்யப் படைகளுக்கு எதிராகப் போரிட்டால். ஐரோப்பா மீது தாக்குதல் நடத்த நான் ஒரு போதும் தாமதிக்க மாட்டேன் என்று கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் புட்டின். உக்ரைன் ரஷ்யப் போரில், உக்ரைன் பல வெற்றிகளை ஈட்டியது போல மேற்கு உலக தொலைக்காட்சிகள் மற்றும் மீடியாக்கள் பரப்புரை மேற்கொண்டு வந்தது. இதனை மக்களும் நம்பி வந்தார்கள்.

ஆனால் தற்போதைய நிலவரப்படி, ரஷ்யா உக்ரைன் நாட்டினுள் முன்னேறி வருகிறது. நாளுக்கு நாள் ரஷ்யப் படைகள் முன்னேறி வருவதை உக்ரைனால் தடுக்க முடியவில்லை. மேற்கு உலக நாடுகள் பல ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தும் கூட, உக்ரைனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்பதே ஜதார்த்த நிலை ஆகும்.

தற்போது உக்ரைன் ரஷ்யாவிடம் பலத்த அடி வாங்கி வருகிறது. ஒரு வகையில் சொல்லப் போனால் உக்ரைன் போரில் பெரும் பின்னடைவில் உள்ளது. இதனால் நேட்டோ படைகள், உக்ரைனுக்குள் சென்று, உக்ரைன் படைகளுக்கு உதவ முன்வந்துள்ளது. இதனைத் தான் புட்டின் கடுமையாக எதிர்த்துள்ளார். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது பெரும் பதற்றமாக உள்ளது. இதேவேளை ரஷ்யா அணு குண்டை பாவித்தால், எப்படி பாதுகாப்பது என்று சூவீடன் நாடு பல முன் ஒத்திகைகளை பார்த்து வருகிறது. இந்த ஒத்திகைகள், ஐரோப்பிய நாடுகளை மேலும் கிலி கொள்ள வைத்துள்ளது.

Source : https://www.dailymail.co.uk/news/article-13412279/Russia-warns-ready-direct-conflict-West-wants-fight-Ukraine-battlefield-Swedish-PM-says-open-hosting-nukes-war-situation.html