விக்னேஷ் சிவனின் எல் ஐ சி படத்தில் சீமான் கதாபாத்திரத்தில் நடந்த மாற்றம்!

விக்னேஷ் சிவனின் எல் ஐ சி படத்தில் சீமான் கதாபாத்திரத்தில் நடந்த மாற்றம்!

இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் டுடே புகழ் ப்ரதீப் ரங்கநாதன் ஒரு படம் நடித்து வருகிறார். லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார். இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் கோவை ஈஷா மையத்தில் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியுள்ளது. இந்த ஷூட்டிங்கை ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் தொடங்கியுள்ளார் விக்னேஷ் சிவன்.

இந்த படத்தில் சீமான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இப்போது அவர் நடிக்கும் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் அவர் இயற்கை விவசாயத்தை நேசிக்கும் ஒருவராக நடிக்கிறாராம். இந்த கதாபாத்திரம் காரணமாகதான் அவர் இந்த படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

முதலில் இந்த படத்தில் சீமான் ஒரு கௌரவ வேடத்தில்தான் நடிக்க ஒப்பந்தமானார் என சொல்லப்பட்ட நிலையில் இப்போது படம் முழுவதும் வரும் விதமாக அவரின் கதாபாத்திரத்தை விரிவாக்கியுள்ளாராம் விக்னேஷ் சிவன்.