கோலாகலமாக நடந்த சங்கர் மகளின் இரண்டாம் திருணம் – குவிந்த கோலிவுட் பிரபலங்கள்!

கோலாகலமாக நடந்த சங்கர் மகளின் இரண்டாம் திருணம் – குவிந்த கோலிவுட் பிரபலங்கள்!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்து இருப்பவர் இயக்குனர் சங்கர் இவர் ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், எந்திரன், சிவாஜி, நண்பன், ஐ,2.0 என இவர் எடுத்த அத்தனை திரைப்படங்களுமே மாபெரும் வெற்றி பெற்ற வரலாற்று சாதனை பெற்ற திரைப்படங்களாக பார்க்கப்படுகிறது.

தற்போது அவர் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் சங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு இன்று பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று இருக்கிறது. ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ரோகித் என்ற கிரிக்கெட் பறிற்சியாளருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் இந்த திருமணம் சில மாதங்களிலேயே விவாகரத்தில் முடிந்து விட்டது.

அதன் பின்னர் மறுமணம் செய்து வைக்க முடிவு செய்த சங்கர் தற்போது தனது உதவி இயக்குனரான தருண் கார்த்திகேயனுக்கு தனது மகளை மணமுடித்து வைத்திருக்கிறார். ஏப்ரல் 15ஆம் தேதி இன்று நடைபெற்ற இந்த திருமணத்தில் பல்வேறு திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர். பிரமாண்டமாக நடைபெற்ற இந்த திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.